Friday, October 29, 2010

ஞாஞளஙலாழன் பதில்கள்

வாசகர்களின் கேள்விகளுக்கு இதோ பதிவுலகச் செம்மல், சிந்தனை சிற்பி (நீங்க எதுக்குங்க டென்சன் ஆகுறீங்க? எனக்கு அரசியலில் பிடிப்பு அதிகம்னு நண்பர்கள் பேசிக்கிறாங்க) ஞாஞளஙலாழனின் பதில்கள்.

1. இளைஞர்கள் அரசியலுக்கு வர முடியுமா?
வரலாம். ஆயுத எழுத்து போன்ற படங்களில்.

2. அப்படியென்றால் நிஜ வாழ்க்கையில் ஆயுத எழுத்து போன்ற படங்கள் சாத்தியமில்லையா?
சாத்தியம் தான். ஆனால் சூர்யா மாதவனால் சுடப்பட்டதுதான் கிளைமாக்ஸ்.

3. சிறந்த முதலீடு?
பாராளுமன்ற தொகுதிகள்.

4. மோசமான கந்துவட்டிக்காரர்கள்?
அரசியல்வியாதிகள்.

5. கள்ளச் சாராயத்திற்கும் நல்லச் சாராயத்திற்கும் உள்ள வேறுபாடு?
விற்பவன் தான்.

6. பகுத்தறிவுவாதிகள்?
அடுத்தவர்களைப் பகுத்தறிவுடன் வாழச் சொல்பவர்கள்.

7. விவசாயி?
தோல்வி மட்டுமே காணும் தொழிலதிபர்

8. புரியாத முரண்?
கிலோ அரிசி நாற்பது ரூபாய். விவசாயி வீட்டில் பட்டினி.

பின் குறிப்பு: தயவு செய்து எனக்குப் பெரிய தட்டி போர்டு வைத்து விடாதீர்கள்.

5 comments:

THOPPITHOPPI said...

welcome

மணிகண்டபிரபு said...

கேள்வி பதில் நன்றாக இருந்தது நண்பரே. அடுத்தவரை பகுத்தறிவுடன் வழச்சொல்பவர்களில் நானும் ஒருவன்.

ரிஷபன்Meena said...

நல்லாருக்கு. தமிழ்நாட்டு பகுத்தறிவு வியாதிகளுக்கு இது பொருந்தாது

srini said...

nice

ஞாஞளஙலாழன் said...

வருகைக்கும் பின்னூட்டமிட்டமைக்கும் நன்றி தொப்பிதொப்பி, மணிகண்ட பிரபு, ரிஷபன் மற்றும் ஸ்ரீநி.

Post a Comment