Friday, January 7, 2011

எதிர்பாரா துயர் தருணங்களில் மனவோட்டம்

சில நிகழ்வுகள் துயரமானவை..சில நிகழ்வுகளில் தருணங்கள் நிகழ்வுகளை விட மிகுந்த துன்பம் கொடுப்பவை.

அவற்றுள் சில..

எங்கெங்கோ சமையல் குறிப்புகள், தொலைக்காட்சியின் சமையல் நிகழ்சிகள் எல்லாவற்றையும் பார்த்து, குறிப்பெடுத்து, பார்த்துப் பார்த்து செய்திட்ட புதிய உணவு ஒன்றை, சரியில்லை என்று கணவன் எளிதாகத் திட்டும் பொழுது, பாராட்டுக்காக ஏங்கிக் காத்திருந்த உடைந்து போன அவள் கனவுகள் அந்த கணம் அவளை என்ன செய்யும்?



எங்கெங்கோ அலைந்து திரிந்து, தனக்கான வீடு என்று ஒரு மரத்தின் ஆள் துளை ஒன்றை கண்டுபிடித்து, அதில் குஞ்சுகளோடு குடித்தனம் நடத்தி வரும் அழகான பறவை ஒன்று, அந்த மரமானது அடியிலிருந்து மனிதன் ஒருவனால் வெட்டப்படும் நிகழ்வில், வீட்டையும் குஞ்சுகளையும் காப்பாற்ற வழியின்றி கதறிக் கதறி அந்த மரத்தையே சுற்றி வரும் தருணம் அதன் மன வோட்டம் என்னவாக இருக்கும்?


இந்த இடம் உனக்கு, அந்த இடம் எனக்கு என்று ஏரியா பிரித்து வாழ்ந்து வரும் நாய்கள், திடீரென்று அந்த இடத்தில் பிளாட் ஒன்று கட்டப்படுவதைப் பார்க்கையில் என்ன நினைக்கும்?

மரண நிகழ்வில், 'நான்' என்ற ஒருவன் இனிமேல் இல்லை என்ற எண்ணம் மனதில் ஓடும் தருணம் தோன்றும் உணர்ச்சிகள் எப்படி பட்டது? அவன் பிறந்த சுவடும் மறைந்த சுவடும் துளியும் இன்றி எப்பொழுதும் போல் இயல்பாக செயல்படப் போகும் பூமியை நினைக்கையில்....

ஆமாம், மணித்துளிகளே வாழ்வின் அடையாளம்..சில மணித்துளிகள் வாழ்வையே மாற்றக் கூடியன.

4 comments:

sakthistudycentre.blogspot.com said...

அருமையான பதிவு..
வாழ்த்துக்கள்...
http://www.sakthistudycentre.blogspot.com/

ஞாஞளஙலாழன் said...

நன்றி கருண் .

எதிர்வீட்டு ஜன்னல் said...

உயிரினங்கள் மேலுள்ள உங்கள் அன்பு உங்கள் எழுத்துகளில் தெரிகிறது.. மனிதத்துவம் குறைந்து விட்டது நண்பரே.. இனி எதிர்பார்க்க கூடாது..
நல்ல பதிவு ...
இன்றுதான் உங்கள் பதிவை பார்கிறேன்.. தொடரட்டும் உங்கள் பணி... வாழ்த்துக்கள் ...

இராஜராஜேஸ்வரி said...

, மணித்துளிகளே வாழ்வின் அடையாளம்..சில மணித்துளிகள் வாழ்வையே மாற்றக் கூடியன.//
வாழ்த்துக்கள் ...

Post a Comment