Wednesday, January 19, 2011

படிச்சவன் எப்படி ஓட்டு போட முடியும்?

என்னங்க, தேர்தல் நெருங்குகிறது, யாருக்கு வாக்களிக்கலாம் என்று பதிவுகளில் சகட்டு மேனிக்கு விவாதித்துவிட்டு கடைசியில் வோட்டே போடாமல் வேலையைப் போய் பார்ப்பவரா நீங்கள்...

இதோ, "உன்னைப் போல் ஒருவன்"!

இப்படி தாங்க..கடந்த நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வோட்டு போட்டாலும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு மட்டும் கண்டிப்பாக போட்டு விடக் கூடாது என்று நண்பர்களிடம் பேசிக்கிட்டு இருந்தேன் (ஏனென்று உங்களுக்குத் தெரியும்தானே).

ஆனால் வச்சாங்க பாருங்க ஒரு ஆப்பு.

என்னன்னு கேட்கிறீங்களா? அதான், கரெக்டா புதன் கிழமை தேர்தல்னு அறிவிச்சாங்க...

மக்களே, நம்ம தமிழ் நாட்டுல படிச்சவன் பெரும்பாலும் சொந்த ஊரில் வேலை செய்ய மாட்டான். கல்லூரி முடிஞ்ச உடனே பெட்டிய தூக்கிக் கிட்டு, சென்னைக்கோ பெங்களூருக்கோ அல்லது வேற எங்கேயோ போய்டுவான்..இந்த மாதிரி தேர்தல் தேதி அறிவிச்சா படிச்சவன் எப்படி அய்யா ஓட்டு போட முடியும்?

அலுவலகத்துல தான் விடுமுறை கொடுப்பாங்களே என்கிறீர்களா?

அட போங்க, புதன்கிழமை மட்டும் விடுமுறைய வச்சுகிட்டு சென்னை-ல இருந்து கன்னியாகுமரி போய் வோட்டு போட்டுட்டு வந்துடுவீங்களா நீங்க? சரி, அப்ப மும்பையில இருக்குறவன் என்ன பண்ணட்டும்?

இதுல படிச்சவங்க எல்லாரும் கண்டிப்பா வோட்டு போடணும்னு இவங்க பண்ணுற பிரச்சாரம் வேற..

வங்கி மற்றும் இதர அரசு தேர்வுகள் எல்லாம் ஞாயிற்றுக் கிழமை வைக்கும் இவங்க தேர்தல் நாளை மட்டும் ஏன் இப்படி நடத்தக் கூடாத நாள்-ல நடத்துறாங்க? அதுவும் வாரத்தின் நடு நாள்-ல? தேர்வு ஆணையத்துக்கு தெரியிற விடயம் தேர்தல் ஆணையத்துக்கு மட்டும் தெரியாதா என்ன?

இப்ப இருக்குற டெக்னாலஜி வளர்ச்சியில ஒருவர் எந்த வாக்கு சாவடியில இருந்தும் எந்த தொகுதிக்கும் வாக்களிக்கலாம் என்கிற முறையை கொண்டு வருவது ஒண்ணும அவ்வளவு கடினமான விசயம் இல்லை. என்ன அரசியல் வாதிகளுக்குத்தான் கொஞ்சம் கஷ்டம்..இங்க இருந்துட்டு மும்பைக்கு போய் காசு கொடுக்க முடியுமா என்ன?

எது எப்படியோ, இந்த வருடமாவது என்னை வோட்டுப் போட விடுவாங்களா?

பின் குறிப்பு: இத படிச்சிட்டு நீங்க தமிழ்மணத்தில வோட்டு போட மறந்துராதீங்க.

6 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வடை எனக்கே...

sakthistudycentre-கருன் said...

கன்டிப்பாக ஓட்டு போடவும்,அது நம் உரிமை..

THOPPITHOPPI said...

//கன்டிப்பாக ஓட்டு போடவும்,அது நம் உரிமை..//

49 ஓ

Lakshmi said...

அதுதான் ஓட்ட்ப்போடுவது நம் உரிமை.அதுவும்49 ஓ.

ஞாஞளஙலாழன் said...

வருகைக்கு நன்றி நண்பர்களே. இந்த முறை நிச்சயம் வோட்டு போட்டே ஆக வேண்டும் என்ற முடிவில் தான் இருக்கிறேன். ஆனால் புதன்கிழமை தேர்தல் நடந்தால் கொஞ்சம் சிரமம் தான்.

எதிர்வீட்டு ஜன்னல் said...

அய்யோ இப்படியும் நடக்கிறதா .. எனக்கு இந்த வருடம் தான் ஒட்டு... முதல் ஓட்டை போடா விடுவார்களா???.....

Post a Comment