Sunday, February 6, 2011

வயலும் வாழ்வும்...முரணா?

காற்றின் திசைக்கேற்ப ஒரு பக்கமாய் சாய்ந்து ஊசல் போல் மொத்தமாக சேர்ந்து ஆடும் நெற்கதிர்கள் படர்ந்துள்ள வயல்வெளிகளை பேருந்துக்குள் இருந்து ரசிப்பது ஒரு தனி இன்பம்.


ஆனால் இப்போதெல்லாம் வெவ்வேறு நிறங்களில் அசைந்து ஆடும் கொடிகளும் அவற்றின் கீழே சீரான இடைவெளிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கற்களும் ஏதாவதொரு சிட்டி என்றவாறு தனது புதிய பெயரைச் சொல்லி கண் சிமிட்டும் அறிவிப்பு பலகைகளுமே சாலையின் இரு மருங்கிலும் நின்று பேருந்துகளைப் பார்த்து கையசைக்கின்றன.

நொந்து போய், தொலைக்காட்சியைத் திறந்தால், ஒரு பிளாட் வாங்கினால் ஒரு கார் இலவசம் என்றும் நான் புக் செய்து விட்டேன், நீங்கள் இன்னும் செய்யவில்லையா என்றும் சிரித்து சிரித்து பேசியவாறே ஜீன்ஸிலும் சுரிதாரிலுமாய் இளம்பெண்கள் நடை போடுகிறார்கள்..

இருக்கும் கொஞ்ச நஞ்ச வயல்களிலும் விவசாயம் செய்ய ஆளில்லை..காரணம்?
"ஏம்பா, அத உழுது, பயிர் செஞ்சி பத்தாயிரம் ரூபா நஷ்டப்படுறதுக்கு சும்மாவே இருக்கலாம்"...

படித்தவர்கள் பெரும்பாலும் விவசாயம் பக்கம் தலை காண்பிப்பதில்லை..அடுத்த தலைமுறையில் விவசாயம் என்னவாகும்?

காற்று, மழை போன்றவை விவசாயிக்கு பல நேரங்களில் எதிரி..இதையெல்லாம் தாண்டி ஒரு பொருளை விளைவிக்க அவன் கொடுக்கும் உழைப்பும், இரவு நேர கவலைகளும், அறுவடை நாளின் எதிர்பார்ப்புகளும் ஒரு குழந்தையை சுமக்கும் தாய்க்கு ஒப்பானது. ஆனால் கடைசியில் கிடைப்பது?

ஒரு கிலோ அரிசி நாற்பது ரூபாய்க்கு விற்கப்படும் போது, அதை உருவாக்கும் விவசாயி ஒரு ரூபாய் அரிசிக்கு ரேஷன் கடையில் கையேந்தி நிற்பது ஏன்?

இடைத்தரகர்கள் இல்லாத நிலையை அரசு உருவாக்கினாலன்றி இதற்கு ஒரு தீர்வு கிடைக்கப் போவதில்லை.

அதுவரையிலும் 'வயலும் வாழ்வும்' என்கிற வாக்கியமே முரணாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கும்!

7 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அருமை அருமை மக்கா.....................

sakthistudycentre-கருன் said...

என்னை ஞாபகம் இருக்கா?

என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை.. நன்றி..

See,

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

sakthistudycentre-கருன் said...

tamilmanam - ல் உங்கள் ஒட்டு போடவும்..

Lakshmi said...

அருமையான, விரிவான பதிவு.

ஞாஞளஙலாழன் said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி மனோ, கருண் மற்றும் லட்சுமியம்மா.

>sakthistudycentre-கருன் said...

>என்னை ஞாபகம் இருக்கா?

கருண், உங்களை மறக்க முடியுமா? தொடர்ச்சியான உங்கள் பதிவுகள் ஆச்சர்யம் அளிக்கின்றன.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அருமையான பதிவு சகோ

நட்புடன் ஜமால் said...

அதுவரையிலும் 'வயலும் வாழ்வும்' என்கிற வாக்கியமே முரணாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கும்!

exactly ...

Post a Comment