Wednesday, February 16, 2011

திருமணம் - கொஞ்சம் யோசிக்கலாமே?

இப்போதெல்லாம் திருமணங்களை விட வரவேற்புகளில் (ரிசப்சன்) தான் அதிக கூட்டத்தைக் காண முடிகிறது. திருமணம் நடப்பதற்கு முந்தைய நாளே மணமகனும் மணமகளும் ஒன்றாக நின்று கொண்டு வரிசையாக வந்து கொண்டிருக்கும் அன்பளிப்புகளை வாங்கி அடுக்கிக் கொண்டே இருக்கிறார்கள் .

அன்பளிப்பு வழங்குவதற்காக, ரேஷன் கடையில் அரிசி வாங்க நிற்பது போன்று ஒரு பெரிய கூட்டமே வரிசையில் நின்று கொண்டிருப்பதைக் காண்கையில் மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. திருமணங்களுக்குச் செல்வதின் நோக்கமே அன்பளிப்பு வழங்குவதும் வருகைப் பதிவு செய்வதும் தான் என்கிற அளவுக்கு நமது மனநிலை மாறிப் போய் விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது .

திருமணம் போன்ற விழாக்களின் போது தான் ஒரு குடும்பத்தின் பாரம்பரியம், கலாச்சாரம் எல்லாம் அழகாக வெளிப்படுவதைக் காண முடியும். அந்த பரபரப்பான தருணங்களும் எதையோ அடைந்து விட்ட பூரிப்பில் சுற்றித் தவழும் பெற்றோரின் கண்களும் நிச்சயம் இதயத்தை வருடக் கூடியன. காற்றை அடக்கிக் கண்களுடன் சேர்த்து தன்னையும் சுழற்றியவாறே அமுத இசையெழுப்பும் நாதஸ்வர வித்வானுக்கும், தன்னையே மறந்து மேளத்துடன் ஒன்றிப் போய் தலையை இருபுறமும் ஆட்டிக்கொண்டே இசை விளைவிக்கும் மேளக்காரரின் அர்ப்பணிப்புக்கும் கிடைக்க வேண்டியது பணம் மட்டுமல்ல நண்பர்களே, நமது பார்வை என்கிற அங்கீகாரமும் தான்.

இன்று ஐநூறு ரூபாய் கொடுத்தால் நாளை நமக்கும் அது திரும்பக் கிடைக்கும் என்ற கணக்கும், போகவில்லையென்றால் நாளை அவன்/அவள் முகத்தில் விழிக்க முடியாதே என்கிற எண்ணமும்தான் உங்களை திருமண விழாக்களுக்குப் போகச் செய்கிறதென்றால் தயவு செய்து நீங்கள் அங்கே போகாமல் இருப்பதே நல்லது. எதைச் செய்தாலும் மனதிற்குப் பிடித்திருந்தால் மட்டுமே செய்ய வேண்டும். வெளி வேஷம் எதற்கு?

எல்லாவற்றிற்கும் மேலாக ஒரே இடத்தில் திருமணமும் ரிசப்சனும் எதற்காக?

கொஞ்சம் யோசிக்கலாமே?

19 comments:

sakthistudycentre-கருன் said...

எனக்கும் ரொம்ப நாளா இந்த டவுட்டு சார்..

sakthistudycentre-கருன் said...

டவுட்டோட நறுக்குனு 2 ஓட்டு போட்டு கிளம்பியாச்சு..

sakthistudycentre-கருன் said...

இப்பயெல்லாம் நம்ம பக்கம் வரதில்லையே சார்..

ஞாஞளஙலாழன் said...

பின்னூட்டத்திற்கும் ஓட்டு போட்டதற்கும் நன்றிகள் கருண். சில நாட்களாக பிளாக்கர் பக்கம் வர இயலவில்லை. இப்ப உங்க தளத்துல தான் இருக்கேன்.

MANO நாஞ்சில் மனோ said...

இது நம்ம மக்களுக்கு தொடர் கதை ஆகி விட்டது.....
இனி திருத்தவும் முடியாது....

ஞாஞளஙலாழன் said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நாஞ்சில் மனோ.

# கவிதை வீதி # சௌந்தர் said...

யோசிக்க வேண்டிய விஷயம் தான் வாழ்த்துக்கள்..

Kurinji said...

மிகவும் வருத்தப்பட வேண்டியது!
குறிஞ்சிகுடில்

ஞாஞளஙலாழன் said...

வருகைக்கு நன்றி சவுந்தர் மற்றும் குறிஞ்சி.

அருள் said...

டோண்டுவின் வேடிக்கை ஆய்வு: பார்ப்பனர்கள் சோம்பேரிகளா?

http://arulgreen.blogspot.com/2011/02/blog-post.html

Lakshmi said...

மிகவும் யோசிக்கவேண்டிய விஷயம். யாரு பூனைக்கு மணி கட்டுவது?

ஞாஞளஙலாழன் said...

வருகைக்கு நன்றி அருள் மற்றும் லட்சுமியம்மா.

சுந்தரா said...

கல்யாணம் பொதுவா பகலில், அதாவது வேலை நேரத்தில் நடக்கும். வரவேற்புகள் மாலையில் இருக்கும். கல்யாணத்துக்கு வரமுடியாதவங்க வருவதற்காக வைப்பாங்க...

ஆனா, இப்ப எல்லாமே ஆடம்பரத்திற்காகத்தான்.

ஞாஞளஙலாழன் said...

>ஆனா, இப்ப எல்லாமே ஆடம்பரத்திற்காகத்தான்.
அப்பட்டமான உண்மை.

உங்கள் முதல் வருகைக்கு நன்றி சுந்தரா.

பயணமும் எண்ணங்களும் said...

அன்பளிப்பு வழங்குவதும் வருகைப் பதிவு செய்வதும் தான் என்கிற அளவுக்கு நமது மனநிலை மாறிப் போய் விட்டதோ//

போலித்தனம்தான். மிக சரியா யோசித்துள்ளீர்கள்...

பயணமும் எண்ணங்களும் said...

உங்க பக்கம் கண்ணுக்கு குளிர்ச்சியா எளிமையா இருக்கு.. வாழ்த்துகள்.

சிவகுமாரன் said...

மிகச் சரியாக சொன்னீர்கள்.
போனவாரம் கூட வரிசையில் நின்றேன் ஒரு வரவேற்பில்.
எங்கள் வீட்டுத் திருமணங்களில் என் பெரியப்பா நாதஸ்வரம் வாசிக்கும் போது அருகில் எங்களில் சிலரை அமர்ந்து ரசிக்கச் சொல்லுவார் .
இப்போது லைட் ம்யூசிக் வைக்கிறார்கள். யாரும் கவனிப்பதே இல்லை. அவர்களை பார்த்தால் பாவமாக இருக்கும்.

அருள் said...

டோண்டு: அரை லூசா, முழு லூசா, காரிய லூசா...?

http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_25.html

ஞாஞளஙலாழன் said...

வருகைக்கு நன்றிகள் பயணமும் எண்ணங்களும், சிவகுமாரன் மற்றும் அருள்.

Post a Comment