Tuesday, March 1, 2011

பைக் பரிதாபங்கள்

1
------------------------------------------
வேகமாக ஓடும்
இருசக்கர வாகனம்.
தலை கவசம்
ஆணின் தலையில் மட்டும்.
பின்னிருக்கையில் மனைவி
கைக்குழந்தையுடன்.
"ஹெல்மெட் அணிந்து
வாகனம் ஓட்டவும்".
ஓட்டுபவருக்கு மட்டும்?
----------------------------------------------

2
*******************************************
ஸ்கூட்டி யொன்று
தன்னை மிஞ்சுகையில்
தன்னிலை மறக்கும் ஆண்.
லாரிக்கும் பேருந்துக்கும்
இடையே
தத்தி முன்னேறும் இளைஞன்.
பின்னிருக்கை பெண்ணுக்குச்
சாகசம் காட்டும் காதலன்.
"சொர்க்கம் அருகிலே".
*****************************************

3
+++++++++++++++++++++++++++++++++
மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும்
பாய்ந்து செல்லும் இரண்டு சக்கரங்கள்.
கார்களைக் கடந்து செல்லும்
வாகன ஓட்டியைக்
கண்ணடிக்கும் பெண்கள்,
கார்களுக்குள்ளும் வெளியிலும்.
விளம்பரங்களில் மட்டும் !
++++++++++++++++++++++++++++++++++

6 comments:

வேடந்தாங்கல் - கருன் said...

கவிதையெல்லாம் சிம்பிளா பயனுள்ளதாக இருக்கிறது..

http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_01.html

ஞாஞளஙலாழன் said...

நன்றி கருண்.

Lakshmi said...

பயனுள்ள கவிதை, வாழ்த்துக்கள்.

Pari T Moorthy said...

தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும்
பாரி தாண்டவமூர்த்தி
http://blogintamil.blogspot.com/2011/03/6.html

ஞாஞளஙலாழன் said...

வருகைக்கு ரொம்ப நன்றி லட்சுமியம்மா.

ஞாஞளஙலாழன் said...

ரொம்ப நன்றி பாரி. இப்போது அங்கு தான் உள்ளேன்.

Post a Comment