Thursday, April 7, 2011

குலுக்கை முத்துக்கள் - பங்குனி 24

இது யதார்த்த சினிமாக்களின் காலம். மூன்று மாதங்கள் வெட்டாமல் வளர்த்த முடியை வாராமல் வருபவனே படத்தின் ஹீரோவாக இருக்க முடியும். மேலும் அவன் மறந்தும் குளித்துவிடக் கூடாது என்பது மற்றொரு கண்டிஷன். யப்பா..இது தான் கிராமத்து ஹீரோ-வின் அடையாளங்களாம். அப்படி ஒரு கேரக்டர் ஏதாவது ஒரு கிராமத்தில் இருந்தால் கண்டுபிடித்துத் தருபவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும். அதெப்படி, ஹீரோயின் மட்டும் மஞ்சள் நிற கேரளத்துக் கிளி?

இது தேர்தல் நேரம். பணத்துக்கு வாக்கை விற்பவர்கள் சோர்ந்து போய் இருப்பதாகக் கேள்வி. ஆனால் நிறைய நல்ல வாக்காளர்களும் இருக்கிறார்கள். யாராவது ஓட்டுக்குப் பணம் கொடுக்க வந்தால் பணத்திற்குப் பதிலாக தனது வீட்டு நாயைக் கொஞ்ச நேரம் மேய்த்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொள்வேன் என்றார் நண்பரொருவர். நாய் பத்திரம்.

எங்கள் ஊரில் முன்பு வாழ்ந்த தாத்தா பாட்டிகள் எவ்வளவு நடக்க முடியாமல் இருந்தாலும் வோட்டு போடாமல் மன அமைதி கொள்ள மாட்டார்கள். ஆனால் இப்போதெல்லாம் தாத்தா பாட்டிகளைப் பார்ப்பதே அரிதாக போய் விட்டது. நாற்பது வயது வருவதற்குள் ஆயிரத்தெட்டு நோய்கள் வந்து அறுபது வயதுக்குள் சொர்க்கம் புகுபவர்களே அதிகரித்து வருகிறார்கள். என்ன மருத்துவ வசதியிருந்து என்ன பயன்? காவல் நிலையமும் மருத்துவமனையும் பார்க்காதவனே நல்வாழ்க்கை வாழ்ந்தவன் என்பார்கள். ரசாயன உரத்தை அரிசியாக்கி சாப்பிடும் நாம் தொலைக்காட்சியையாவது தூரக் கடாசுவது நல்லது.

கடைசியாக ஒன்று...

ஏழைகள் இருப்பது வரை இலவசங்கள் தொடரும். டாஸ்மாக் கடைகளில் எக்கசக்க கூட்டம்.

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

பணத்திற்குப் பதிலாக தனது வீட்டு நாயைக் கொஞ்ச நேரம் மேய்த்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொள்வேன் என்றார் நண்பரொருவர். நாய் பத்திரம்.//
Interesting.

தக்குடு said...

சார்! உங்க ப்ளாக் பேரை எங்கேந்து சார் புடிச்சீங்க? பேர் ரொம்ப சூப்பர்...:)

ஞாஞளஙலாழன் said...

எங்கிருந்தும் பிடிக்கலீங்க. பிடித்த எழுத்துகளை வைத்து நானே உருவாக்கியது. தமிழர்களில் பெரும்பான்மையோர் இந்த எழுத்துகளைத் தவறாக உச்சரிக்கிறார்கள் என்கிற கோபமும் எனது பெயருக்கு ஒரு காரணம்.

ஞாஞளஙலாழன் said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் இராஜராஜேஸ்வரி, தக்குடு.

Post a Comment