Sunday, November 20, 2011

எங்கே நடுநிலை?

ஒரு குறிப்பிட்ட தமிழ் சேனலில் கூடங்குளம் தொடர்பாக வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளன. கூடங்குளம் அணு உலை வேண்டுமா, கூடாதா என்பது இந்த பதிவின் நோக்கமல்ல. அணு உலைக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நிறைய போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் பல்லாயிரக்கணக்கானோர் இவற்றில் கலந்து கொண்டுள்ளதாகவும் சில நூறு பேர் அமர்ந்திருக்கும் பந்தல்களைக் காட்டி தொடர்ந்து செய்தி வெளியிட்டு வரும் அந்த தொலைக்காட்சி, அணு உலைக்கு ஆதரவானவர்களிடம் பேட்டி எடுத்து வெளியிடுவது போல அதற்கு எதிராக போராடுபவர்களின் கருத்துகளையும் தருவது தானே நடுநிலைக்கு அழகு? அணு உலைக்கு எதிரான போராட்டங்களை இப்படி இருட்டடிப்பு செய்வது ஏன்?

இப்போதெல்லாம் நடுநிலையான ஊடகங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதே பெரிய வேலையாகப் போய் விட்டது நமக்கு. ஒரு பக்கம் நேஷனல் மீடியா என்று சொல்லிக் கொண்டு ஒரே பிரச்சனையை ஒரு வாரம் முழுக்க விவாதிக்கும் ஊடகங்கள், மறுபக்கம் தமக்குப் பிடித்த செய்திகளை மட்டுமே ஒளிபரப்பும் அரசியல்வாதிகளின் கொள்கை பரப்பு ஊடகங்கள்...

தமக்குப் பிடிக்காத செய்திகளை இருட்டடிப்பு செய்வதிலும் திரித்து வெளியிடுவதிலும் நிறைய ஊடகங்கள் வல்லவர்களாகவே உள்ளனர். சென்ற ஆண்டின் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட உடன் “சல்மான்ஸ் தபாங் ஒன் நேஷனல் அவார்ட்” என்று செய்தி வெளியிட்ட “தேசிய” ஊடகங்களை என்னவென்று சொல்ல?

யார் நடத்தினால் என்ன? செய்திகளில் நடுநிலை வேண்டாமா? இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் பாமர மக்களை ஏமாற்றி பிழைப்பை ஓட்டுவது?

5 comments:

Lakshmi said...

அதான் ஆளுக்கொரு பத்திரிகை கையில வச்சிருக்காங்களே அப்புரம் நடு நிலமைச்செய்தியை யாருகிட்டேந்து எதிர் பார்க்கமுடியும்?

அப்பாதுரை said...

உங்கள் பதிவுப் பெயரால் உந்தப்பட்டு இங்கே வந்தேன். அன்பே கடவுள் மற்றவை சிற்பங்கள் என்று முகத்தில் அடித்த முதல் வரிகள் - கொஞ்சம் இங்கே வட்டமிட வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கியது. கூடங்குளம் விட்டு மீண்டும் வருவேன். (எனக்கு கூடங்குள எதிர்ப்பில் உடன்பாடில்லை.)

அப்பாதுரை said...

ஞாஞளஙலாழன் - ஏதாவது பொருளுண்டா?

ஞாஞளஙலாழன் said...

>Lakshmi said...
>அப்பாதுரை said...

வருகைக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க...

ஞாஞளஙலாழன் said...

அப்பாதுரை said...
ஞாஞளஙலாழன் - ஏதாவது பொருளுண்டா?

பொருளெல்லாம் இல்லைங்க. எனக்குப் பிடிச்ச எழுத்துக்களைச் சேர்த்து நானே உருவாக்கிக் கொண்ட பெயர்.
இன்னொரு விசயம் இங்கே!

Post a Comment